டிரம்புடன் மோடி என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் - ராகுல்காந்தி

share on:
Classic

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பில் மோடி என்ன பேசினார் என்பதை விளக்க வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா என்று மோடி கேட்டதாக கூறியுள்ளார். ட்ரம்பின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து உரிய விளக்கம் அளிக்க ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஷிம்லா ஒப்பந்தம் குறித்து மோடி பேசியது உண்மை என்றால் அவருக்கு நாட்டு நலனில் அக்கறை இல்லை என்றே தெரிகிறது என்றும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan