பயங்கரவாதியை மரியாதையாக அழைத்த ராகுல்.. வீடியோவை வைரலாக்கும் பாஜக..!

share on:
Classic

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரை மரியாதையாக அழைக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் விவாதப் பொருளாகியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கந்தகர் விமானம் கடத்தப்பட்டது போது, அதனை விடுவிப்பதற்காக பாஜக அரசு ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் ஆசாரை விடுவித்ததை சுட்டிக் காட்டினார். அப்போது அவர் இந்தியில் மசூத் அசார் ஜி என குறிப்பிட்டிருந்தார். புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட பயங்கரவாத இயக்கத்தின் தலைவரை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மரியாதை அழைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

இதனை மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ராகுல் லவ் டெரரிஸ்ட் (#RahulLovesTerrorist) என்ற ஹேஷ்டேக் உடன்  வீடியோவை பதிவிட்டுள்ள அவர், பாகிஸ்தானுக்கும் ராகுல் காந்திக்கும் பொதுவாக இருக்க கூடிய விஷயம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் டுவிட்டரில் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் ரவிச்சங்கர் பிரசாத் தனது டுவிட்டர் பதிவில், காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங் ஒசாமாவை ஜி என அழைத்ததை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்?. மேலும் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் BJPLovesTerrorist என்ற ஹேஸ்டேக்கை காங்கிரஸ் கட்சியினர் டுவிட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்

News Counter: 
100
Loading...

sajeev