வயநாட்டில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தி முன்னிலை..

share on:
Classic

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி 1 லட்சத்திற்கு அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்திரப்பிரதேசத்தின் அமேதி, கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். அமேதியில் ராகுலுக்கும் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானிக்கும் கடும் போட்டி நிலவுகிறது. தொடக்கத்தில் ஸ்மிரிதி இரானி முன்னிலை வகித்தாலும், தற்போது அங்கு ராகுல்காந்தி குறைவான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். ஆனால் காங்கிரஸ் கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. அங்கு வயநாட்டில் போட்டியிட்ட ராகுல் 1 லட்சத்திற்கும் அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.  
 

News Counter: 
100
Loading...

Ramya