காங்கிரஸ் கட்சியின் கோட்டையான அமேதியில் ராகுல்காந்தி பின்னைடைவு..!!

share on:
Classic

காங்கிரஸ் கட்சியின் கோட்டை என கருதப்படும் அமேதியில் ராகுல்காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

உத்திரப்பிரதேசத்தின் அமேதி தொகுதி காங்கிரஸ் கோட்டையான அமேதி தொகுதியில் ராகுல் காந்திக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அத்தொகுதியில் தோல்வியடைந்ததில்லை. எனினும் தபால் வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் போது இந்த எண்ணிக்கை மாறுபடுமா என்பதை பார்க்க வேண்டும். நாட்டின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் மாநிலங்களில் உத்திரப்பிரதேசம் மாநிலம் முக்கிய பங்கு வகிக்கிறது. மிகப்பெரிய மாநிலமான அங்கு மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் யார் முன்னிலை பெறுகிறார்களோ அவர்கள் மத்தியில் அமையப்போகும் ஆட்சிக்கு பெரும் பங்கு வகிப்பர். 

இந்நிலையில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி முன்னிலையில் உள்ளார். நாடு முழுவதுமே தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலை வகிக்கிறது.
 

News Counter: 
100
Loading...

Ramya