தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

share on:
Classic

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

அதன்படி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இதனைத் தொடர்ந்து, 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் வரும் 18ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதேநேரத்தில் சில இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்ககூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 11 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக திருத்தணியில் 109 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.

 

News Counter: 
100
Loading...

aravind