தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்

share on:
Classic

தமிழகத்தின் 11 மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர்  ஆகிய வடகடலோர மாவட்டங்களிலும் உள்மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 101 டிகிரிக்கு மேல் வெயில் பதிவாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், கடந்த இருதினங்களாக மழை பெய்து வருவது சென்னை வாசிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind