3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

share on:
Classic

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தின் விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, தேனி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களுகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் வேலூர் மாவட்டத்தில் 3 செண்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் ஒரு செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind