டெல்லியை குளிர்வித்த மழை

share on:
Classic

டெல்லியில் கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

வட மாநிலங்களிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் வெயில் கொளுத்தி வந்தது. அதேபோல் கடும் அனல் காற்று வீசியதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் டெல்லியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த வாரம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் ஆங்காங்கே மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind