தமிழகத்தில் பரவலான இடங்களில் மழை..!

share on:
Classic

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் பரவலாக மழை பொழிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தேவனூர், சந்தப்பேட்டை, அரகண்டநல்லூர், அரும்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஒடியது.

குடியாத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால், பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். பலத்த காற்றுடன் பெய்த மழையால் சாலையில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

தேனியில் பரவலாக சாரல் மழை பொழிந்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்று வட்டாரம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல்மழை பெய்து வருவதால், பூமியின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind