தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

share on:
Classic

தமிழக உள் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

தமிழக கடலோர பகுதிகளின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் வெப்பச்சலனம் உருவாகி, தமிழக உள் மாவட்டத்தில் ஓரிரு பகுதியில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர் மற்றும் ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் 2 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும், திருவள்ளூர், நாமக்கல், திண்டுக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இன்று வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ramya