மழைநீர் சேமிப்பு செயல் திட்டம்: மாநில அரசுகளை அறிவுறுத்தும் மத்திய அரசு

Classic

மழைநீர் சேமிப்புக்கு செயல் திட்டம் வகுக்க வேண்டும் என மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர், அர்ஜூன் ராம் மெக்வால் நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதில் அளித்தார். அதில், தண்ணீர் என்பது மாநில பட்டியலில் உள்ளதாகவும், மழை நீர் சேகரிப்பு, நீர் பாதுகாப்பு, நீர் உற்பத்தி ஆகியவற்றுக்காக தங்களது மாநிலத்திற்கென பிரத்யேக செயல் திட்டத்தை மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணிக்க மாநில அரசுகளின் தலைமை செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind