’ராஜாவுக்கு செக்’ படத்தின் டீசர் வெளியீடு..!!

share on:
Classic

சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன் நடிப்பில் உருவாகியுருக்கும் ராஜாவுக்கு செக் என்ற படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பாரதிராஜாவுக்குப் பிறகு,கிராமியப் படங்களை மண்வாசனையோடு தரும் தரமான படைப்பாளியாக கொண்டாடப்படுபவர் இயக்குநர் சேரன். ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை என்கிற படத்துக்கு பிறகு சேரன் தற்போது,‘திருமணம்’ என்கிற படத்தை இயக்கிருந்தார். இதில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி, காவ்யா சுரேஷ், சேமா நாயர், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ஜெயபிரகாஷ், ஆகியோர் நடிக்க, ஒரு முக்கிய கேரக்டரில் சேரனும் நடித்திருந்தார்.

இந்த திருமணம் படம் கடந்த மார்ச் 1-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. திருமணம் படத்திற்கு பிறகு சேரன் நடித்து வந்த படம் தான் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் இயக்கும் இந்த படத்தில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கேவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ராஜாவுக்கு செக் படத்தின் டீசர் இப்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan