"கமல்ஹாசனின் அரசியல் அஸ்தமித்துவிட்டது"

share on:
Classic

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்த நிலையில், தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்ச்சித்துள்ளார்.

"தான் நடித்த திரைப்படம் தாமதமாக வெளியாவதை கூட தாங்கி கொள்ள முடியாமல் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறிய கமல்ஹாசன், திராவிட கட்சிகள் பற்றி பேச அருகதை இல்லை" என்று அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சித்துள்ளார். இந்நிலையில், "மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் கைகள் சுத்தமாக இருக்கிறதா? என்றும் கூட்டணிக்கே ஆள் இல்லாததால் கமலின் அரசியல் அஸ்தமித்து விட்டது. மேலும், கமலுடன் கூட்டணி சேர ஆள் இல்லை" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விமர்சித்தார்.

News Counter: 
100
Loading...

vinoth