பேட்ட வெற்றி அலகு குத்தி ரசிகர்கள் வேண்டுதல்..!

share on:
Classic

ரஜினிகாந்தின் பேட்ட படம் வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் அலகு குத்தி வழிபாடு நடத்தினர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில்  விஜயா, கோமதி ஆகிய 2 திரையரங்குகளில் பேட்ட திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் வெற்றி பெற வேண்டி, ரஜினியின் தீவிர ரசிகரான திருவாளப்புத்தூரைச் சேர்ந்த நடராஜன், பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பிரசன்ன மாரியம்மன் ஆலயத்தில் 16 அடி நீளமுள்ள அலகு குத்தி வழிபாடு நடத்தினார். 

தொடர்ந்து மேளதாளத்துடன் ரஜினி ரசிகர்கள் அவரை ஊர்வலமாக திரையரங்கம் அழைத்து வந்தனர். பின்னர் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

 

News Counter: 
100
Loading...

aravind