கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு

share on:
கருணாநிதி சிலை, திமுக, ரஜினிகாந்த், கமல்ஹாசன், Rajinikanth, Kamalhaasan, Karunanidhi Statue
Classic

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அறிவாலயத்தில் வரும் டிசம்பர் 16ம் தேதி  திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட உள்ளது. 

இந்த சிலை திறப்பு விழாவிற்கு வருகை தர சோனியாகாந்தி,  ராகுல் காந்தி, கேரள முதல்வர் பிணராயி விஜயன், நாரயணசாமி, சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி, சரத்பவார், பரூக் அப்துல்லா, முலாயம்சிங் யாதவ் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழகத்தில் இருக்கும் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்திற்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்களை திமுகவின் முக்கிய பிரமுகர்கள் நேரில் சென்று அழைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

News Counter: 
100
Loading...

vijay