ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 500 பேர் திமுகவில் இணைந்தனர்!!!

share on:
Classic

மாநில நிர்வாகிகள் மன உளைச்சலை ஏற்படுத்தியதால் திமுகவில் இணைந்ததாக கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 500 பேர், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அந்த கட்சியில் இணைந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் மதியழகன், ரஜினி மக்கள் மன்ற மாநில நிர்வாகிகள், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக புகார் தெரிவித்தார். தமிழக மக்களுக்காக ஓய்வின்றி உழைக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் இருப்பதால் அந்த கட்சியில் இணைந்ததாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி மதியழகன் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரஜினி ரசிகர்கள் 25 ஆயிரம் பேர் திமுகவில் இணைய உள்ளதாகவும் அப்போது அவர் தெரிவித்தா

News Counter: 
100
Loading...

aravind