உலக அளவில் 500 கோடி...வசூல் வேட்டையில் 2.O ..!

Classic

ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி காந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் என பிரமாண்ட கூட்டணியால் 2.O படம் உருவானது . வெளியான முதல் நாளில் இருந்தே வசூல் சாதனை படைத்து வருகிறது 2.O

முதல் வாரத்தில் மட்டும் உலகளவில் 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து உலக அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்ததாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் 2.O படம் தற்போது உலக அளவில் ரூ. 500 கோடி வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் ட்விட்டரில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 

 

News Counter: 
100
Loading...

youtube