ரிலீசானது பேட்ட..மரண மாஸ் காட்டும் ரசிகர்கள்..திணறும் திரையரங்குகள்..!

Classic

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் பொங்கல் ஸ்பெஷலாக இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் பேட்ட. இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இரு கதாநாயகிகளாக த்ரிஷா, சிம்ரன் நடித்துள்ளனர். மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நவாசுதீன் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து படத்திற்கு மேலும் மெருகேற்றியுள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என அனைத்துமே ஏற்கனவே ஹிட் அடித்தன. 

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே பொங்கல் பரிசாக பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசானது. நள்ளிரவு முதலே திரையரங்குகளுக்கு படையெடுக்க தொடங்கிய ரஜினி ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். 

தல அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் படமும் இன்று ரிலீசானதால் எந்த படம் மரண மாஸ் காட்டப்போகிறது ?, எப்படம் அடித்துத்  தூக்கப்போகிறது ? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே அதிகரித்து இருக்க  மற்றொருபுறம்,  ‘நீ தல ரசிகன்’, ’நீ தலைவர் ரசிகன்’ என்ற வேறுபாடு ஏதுமின்றி இருவரின் ரசிகர்களுமே நட்பு பாராட்டி திரையரங்குகளில் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மூழ்கி படங்களை கொண்டாடி வருகின்றனர். 
 

News Counter: 
100
Loading...

aravind