‘பேட்ட’ படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக ரஜினி அறிவிப்பு

share on:
Classic

சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக ரஜினிகாந்தே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  மேலும்,  திட்டமிடப்பட்ட 15 நாட்களுக்கு முன்னரே படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினியின் 165- வது படமாக உருவாகி வருகிறது பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். திரிஷா, சிம்ரன் என படத்தில் ரஜினிக்கு இரண்டு கதாநாயகிகள் . சன் பிக்சர்ஸ்' தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். திரு ஒளிப்பதிவில் உருவாகி வரும் இத்திரைத்தின் செகண்ட் லுக்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக்கி, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், மாளவிகா மோகனன், இயக்குநர் மகேந்திரன், சசிகுமார் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

News Counter: 
100
Loading...

sankaravadivu