ஜித்து கேரக்டரில் விஜய் சேதுபதி... பேட்ட படத்தின் புதிய அப்டேட்....

பேட்ட, ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, Peta, Rajinikanth, Vijay Sethupathi
Classic

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள பேட்ட படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில்  ரஜினி நடிக்கும் 'பேட்ட' படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டர், சிங்கிள் டிராக் உள்ளிட்ட புதுப்புது அறிவிப்புகள் இணையதளத்தில் வைரலாகி கொண்டே வருகிறது. சில நாட்களுக்கு முன் பேட்ட படத்தின் 'மரண மாஸ்' பாடல் யூடியூபில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் வரிசையில் பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவர் ஜித்து என்ற கேரக்டரில் பேட்ட படத்தில் நடிப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் கையில் துப்பாக்கியுடனும் முகத்தில் வெட்டுகாயங்கள் உடன் இருப்பது போன்ற போஸ்டரையும் வெளியிட்டு உள்ளனர்.

News Counter: 
100
Loading...

vijay