உலகின் டாப் 10 சிறந்த விமான நிலையங்கள் : 8-வது இடத்தில் இந்தியாவின் ராஜீவ்காந்தி சர்வதேச விமானநிலையம்..!!

share on:
Classic

2019-க்கான டாப் 10 சிறந்த விமானநிலையங்கள் பட்டியலில் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமானநிலையமும் இடம்பெற்றுள்ளது. 

2019க்கான டாப் 10 சிறந்த விமான நிலையங்கள், டாப் 10 மோசமான விமான நிலையங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. குறித்த நேரம் செயல்பாடு, சேவை தரம், உணவு வகைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு ஏர் ஹெல்ப் (Air Help) என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. 2018-ல் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில், 40,000க்கும் மேற்பட்ட பயணிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 

2019-ன் டாப் 10 சிறந்த விமானநிலையங்கள் :

 1. ஹமாத் சர்வதேச விமானநிலையம், கத்தார்
 2. டோக்யோ சர்வதேச விமானநிலையம், ஜப்பான்
 3. ஏதன்ஸ் சர்வதேச விமானநிலையம், கிரீஸ்
 4. அஃபோன்சோ பெனா சர்வதேச விமானநிலையம், பிரேசில்
 5. டான்ஸ்க் லெக் வெலெசா விமானநிலையம், போலந்து
 6. ஷெரேமெட்யெவொ சர்வதேச விமானநிலையம், ரஷ்யா
 7. சாங்கி விமானநிலையம், சிங்கப்பூர்
 8. ராஜீவ் காந்தி சர்வதேச விமானநிலையம், இந்தியா
 9. டெனர்ஃபே வடக்கு விமானநிலையம், ஸ்பெயின்
 10. விர்கோபோஸ் சர்வதேச விமானநிலையம், பிரேசில்

2019-ன் டாப் 10 மோசமான விமானநிலையங்கள் :

 1. லண்டன் காட்விக் விமானநிலையம், யுனைடெட் கிங்டம்
 2. பில்லி பிஷப் டொரண்டோ சிட்டி விமானநிலையம், கனடா
 3. போர்டோ விமானநிலையம், போர்ச்சுக்கல்
 4. பாரிஸ் ஒர்லி விமானநிலையம், பிரான்ஸ்
 5. மான்செஸ்டர் விமானநிலையம், யுனைடெட் கிங்டம்
 6. மால்டா சர்வதேச விமானநிலையம், மால்டா
 7. ஹென்ரி கோண்டா சர்வதேச விமானநிலையம், ரோமானியா
 8. எயிந்தோவன் விமானநிலையம், நெதர்லாந்து
 9. குவைத் சர்வதேச விமானநிலையம், குவைத்
 10. லிஸ்பன் போர்டெலா விமான நிலையம், போர்ச்சுக்கல்
News Counter: 
100
Loading...

Ramya