ராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..!!

share on:
Classic

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் நளினிக்கு மேலும் 3 வாரம் பரோலை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் கைதான நளினிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ஆறு மாதம் பரோல் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் சிறை விதிகளின் படி ஒரு மாதம் மட்டுமே பரோல் வழங்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை சுட்டி காட்டிய நீதிபதிகள் நளினிக்கு ஒரு மாத காலம் மட்டுமே பரோல் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவின் படி கடந்த ஜீலை 25 ஆம் தேதி நளினி பரோலில் விடுவிக்கப்பட்டார். வேலூர் மாவட்ட சத்துவாச்சாரியில் தங்கியிருக்கும் அவர் தனது மகளின் திருமண ஏற்பாடுகள் முடியாததால் மேலும் ஒரு மாதத்திற்கு பரோலை நீட்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நளினிக்கு மேலும் மூன்று வார காலம் பரோலை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தனர்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan