அரசியல் மற்றும் திரையுலக ஸ்டார்களின் வருகையால் மகிழ்ந்த சூப்பர்ஸ்டார்...!

share on:
Classic

நடிகர் ரஜினிகாந்த் இல்லத்திருமண விழாவில் அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்துகொண்டனர். 

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யாவின் திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று ஆடம்பரமாக நடைபெற்றது. பல்வேறு கட்சியின் தலைவர்கள், நடிகர்கள் திருமணத்திற்கு வருகை தந்ததால் நட்சத்திர விடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் போலீசாரால்  தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. வேதங்கள் முழங்க, இசை வாத்தியங்கள் ஒலிக்க சௌந்தர்யா - விசாகன் திருமணம் இனிதே நடைபெற்றது. 

திருமணத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் கடம்பூர் ராஜு, அமைச்சர் தங்கமணி, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்திருந்தனர். 

இவர்களைத் தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மு.க.அழகிரி, திருநாவுக்கரசர், நடிகர் தனுஷ், கவிஞர் வைரமுத்து மற்றும் அவரின் மகன் மதன் கார்க்கி, இசையமைப்பாளர் அனிருத், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் வெங்கட், இயக்குனர் பி.வாசு, இயக்குனர் செல்வராகவன், நடிகர் பிரபு, நடிகர் விக்ரம் பிரபு, நடிகர் லாரன்ஸ், நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், ஆகியோரும் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசன், நடிகை அதிதி ராவ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா, இயக்குனர் ஹரி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, தமிழருவி மணியன், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகர் விஜயகுமார் குடும்பத்தினர் ஆகியோரும் திருமணத்திற்கு வருகை தந்தனர். 

 

News Counter: 
100
Loading...

mayakumar