விஜய், அஜித், தனுஷுடன் நடிக்க ஆசை: ரகுல் ப்ரீத் சிங்

share on:
Classic

கார்த்திக், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தேவ்' படம் காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த பாடத்தில் தனது கதாபாத்திரம் பற்றி கூறியுள்ளார் ரகுல்.

தமிழில் 'தடையற தாக்க' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் கார்த்தியுடன் நடித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியின் மூலம் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பெற்றார். தற்போது அவரிடம் கார்த்தியுடன் 'தேவ்',  செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவுடன் NGK, சிவ கார்த்திகேயனுடன் பெயரிடப்படாத படம் என பெரிய லிஸ்டே இருக்கிறது.

'தேவ்' படத்தில் தனது கதாபாத்திரம் பற்றி கூறிய ரகுல் "இந்த படத்தில் அமெரிக்காவை சேர்ந்த பெண்ணாக வருகிறேன். எதற்குமே நேரம் இல்லாமல், வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்கும் ஒருவர். யாரையும் நம்பாமல் தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என நினைக்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் ஹீரோ நுழைந்து எப்படி அவரை மாற்றுகிறார் என்பது தான் கதை" என்று கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய அவர் தமிழில் விஜய், அஜித், தனுஷுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி என்று தன்  ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

News Counter: 
100
Loading...

youtube