வாழும்போதே வரலாறாய் வாழ்ந்தவர் ராமசாமி படையாச்சியார் - முதலமைச்சர் பழனிசாமி

share on:
Classic

வாழும்போதே வரலாறாய் வாழ்ந்தவர் ராமசாமி படையாச்சியார் எனவும், அவர் நாட்டுக்காகவும் சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர் எனவும் முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப் பேரவை மண்டபத்தில் ராமசாமி படையாச்சியாரின் முழு உருவ படத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், சமுதாயப் பணிக்காக முழுமையாக ஈடுபட்டு 1952ல் உழைப்பாளர் கட்சி தொடங்கி, 19 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பேரவையில் பணியாற்றியதாகத் தெரிவித்தார். வாழும்போதே வரலாறாய் வாழ்ந்தவர் ராமசாமி படையாச்சியார் எனவும், அவர் நாட்டுக்காகவும் சமுதாயத்திற்காகவும் பாடுபட்டவர் எனவும், கடலூரில் மணிமண்டபம் மற்றும் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravind