குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை

share on:
Classic

இந்தி பிரசார் சபா நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார்.

குடியரசு தலைவர்  ராம்நாத் கோவிந்த் இருநாள் பயணமாக தமிழகம் மற்றும் ஆந்திரப்பிரதேசத்துக்கு வருகை தரவுள்ளார். சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார் சபா நிகழ்ச்சியில் பங்கேற்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகிறார். இந்தி பிரசார் சபாவில் மகாத்மா காந்தி சிலையை இன்று திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்துக்கு செல்லும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind