ஐ.பி.எல் தொடரில் இருந்து ரபாடா திடீர் விலகல்..!

share on:
Classic

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் கஜிஸோ ரபாடா எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

ஐ.பி.எல் போட்டியில் இருந்து ரபாடா விலகியிருப்பது டெல்லி அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணிக்காக ரபாடா சிறப்பாக விளையாடினார். இந்நிலையில், பயிற்சியின்போது அவருக்கு முதுகுவலி ஏற்பட்டதால், எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விட்டு விலக எனக்கு மிகவும் கடினமாக உள்ளது. மேலும் உலககோப்பை தொடரில் டெல்லி அணி கோப்பையை கைப்பற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan