149 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வமான சந்திர கிரகணம்..!

share on:
Classic

வானியலின் அரிய நிகழ்வான சந்திர கிரகணத்தை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மக்கள் கண்டு ரசித்தனர்.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி இருந்தால், பூமியின் நிழல் சந்திரனின் மேல் விழுந்து, அதனை பார்வையில் இருந்து மறையச் செய்வது சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி, நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நிகழ்ந்த சந்திர கிரகண நிகழ்வைக் காண மக்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். சென்னையில், அதிகாலை 1:17 நிமிடங்களுக்கு தொடங்கிய சந்திர கிரகணம், நான்கரை மணி வரை நீடித்தது.

சந்திர கிரகணத்தைக் காண சென்னை பிர்லா கோளரங்கில் பொதுமக்கள், குழந்தைகளுடன் குவிந்தனர். ஆனால், கிரகணம் தொடங்கிய 30 நிமிடங்களுக்கு மட்டுமே ரசிக்க முடிந்தது. அதன் பின்னர் மேக மூட்டம் காரணமாக சென்னையில் சந்திர கிரகணத்தை காண முடியாததால், பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

News Counter: 
100
Loading...

aravind