மகேஷ்பாபுவிற்கு ஜோடியாகும் ராஷ்மிகா..!!

share on:
Classic

தெலுங்கு சினிமாவில் இப்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா.

பெங்களூரைச் சேர்ந்த இவங்க ‘கீதா கோவிந்தம்’படத்தின் மூலம் தெலுங்கு மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளார். கீதா கோவிந்தம் படம் மிக பெரிய வெற்றி படமாக அமைந்திருந்ததனால் இப்போது நடிகை ராஷ்மிகாவுக்கு தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது.

இப்போது நடிகை ராஷ்மிகா தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதனால் ராஷ்மிகா மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றார். நடிகர் மகேஷ்பாபு ‘பரத் அனே நேனு’ படத்தின் வெற்றிக்கு பிறகு வம்சி இயக்கத்தில் ‘மகர்ஷி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  

இந்த படத்தை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார்.  இந்தப் படத்தை அணில் ரவிபுடி இயக்கருக்கிறதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan