எலிக்காய்ச்சல் என்றால் என்ன ? எப்படி பரவுகிறது ? வந்தால் என்ன செய்யலாம் ?

share on:
Classic

எலிக்காய்ச்சல் என்றால் என்ன ?

எலிக்காய்ச்சல் எனும் நோய் ஸ்பைரோகிட் எனும் பாக்டீரியா வகையை சார்ந்த கிருமிகளால் மனிதன் மற்றும் விலங்குகளுக்கு வரக்கூடிய நோய் ஆகும்.

எப்படி பரவுகிறது ?

நோய் தொற்றுள்ள விலங்குகளின் சிறு நீர் மூலம். 

நோய் தொற்றுள்ள விலங்குகளின் சிறு நீரால் மாசுபட்ட சிறுநீர் , நிலம் , நீர் மற்றும் உணவு பொருட்கள்

மேலும் உடலில் ஏற்பட்டுள்ள சிறு காயங்கள் வெட்டுக்கள் சிராய்ப்புகள் மற்றும் கண் மூக்கு அல்லது வாய் வழியாகவும் இக்கிருமிகள் உடலில் புகுந்து இந்நோயை உண்டாக்கும் 

பெரும்பாலும் இந்நோய் தண்ணீர் மாசுபடுவதால் உண்டாகின்றது 

இந்நோய் கிருமிகள் சில வாரங்கள் முதல் பல மாதங்கள் வரை சுற்று சூழலில் உயிர்வாழும் தன்மை கொண்டவை 

வந்தால் என்ன செய்யலாம் ?

பெரும்பாலான எலி காய்ச்சல் நோயாளிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவதில்லை 

காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனை பெற்று முறையான சிகிச்சை பெற வேண்டும்.

மருத்துவ ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்துகள் உட்கொள்ளுவதை அல்லது போலி மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த நோய்க்கான சிகிச்சை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவ மனைகளில் இலவசமாக கிடைக்கும். 

எவ்வாறு தடுக்கலாம்: 

குடிநீரில் குளோரின் கலந்து பயன்படுத்துதல் 

காய்ச்சி வடிகட்டிய குடிநீரை அருந்துதல் 

காலணிகளை பயன்படுத்துதல் 

நீச்சல் குளங்களில் குளோரினேஷன் செய்தல் 

குடிநீர் குழாய்களில் கசிவு இல்லாதவாறு பராமரித்தல் 

எலிகளை கட்டுப்படுத்துதல்; 

எலிப்பொறிகள் மூலம் பிடித்து அளிக்கலாம் 

எலிக்கொல்லிகள் பயப்படுத்தலாம் 

News Counter: 
100
Loading...

sankaravadivu