RAW-வின் தலைவராக சமந்த் கோயலும், IB-ன் இயக்குநராக அரவிந்த் குமாரும் மாற்றம்..யார் இவர்கள்..?

share on:
Classic

இந்தியாவின் முக்கிய உளவு அமைப்பான ரா-வின் புதிய தலைவராக சமந்த் கோயலும், புலனாய்வு அமைப்பின் இயக்குநராக அரவிந்த் குமாரையும் நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இருவரும் யார்..?

ஒரு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அந்நாட்டின் உளவு அமைப்புகளின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அந்த வகையில் இந்தியாவில், ஐ.பி, ரா என இரண்டு உளவு அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. ஐ.பி எனப்படும் இன்டலிஜன்ஸ் பீரோ அமைப்பு உள்நாட்டு உளவு தகவல்களை சேகரிக்கிறது. ரா அமைப்பு மற்ற நாடுகளின் நடவடிக்கைகளை சேகரிக்கிறது. இந்தியாவின் மிக உயர்ந்த அமைப்புகளான இந்த இரண்டு அமைப்புகளுக்கும் பிரதமர் மோடி தலைவர்களை நியமித்துள்ளார்.  ஐ.பி அமைப்புக்கு அரவிந்த் குமார் என்பவர் இயக்குநராகவும், ரா அமைப்பின் தலைவராக சமந்த் கோயலும் செயல்பட உள்ளனர். 

ரா அமைப்பின் தலைவராக பதவியேற்க உள்ள சமந்த் கோயல், பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட உரி தாக்குதல், சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாலகோட் தாக்குதல்களுக்கு முக்கிய பங்காற்றியவர் ஆவார். 1984 ஆம் ஆண்டு பஞ்சாப் ஐ.பி.எஸ் கேடரான இவர் உளவு நடவடிக்கைகளில் கை தேர்ந்தவராக கருதப்படுகிறார். 

இதேபோல், ஐ.பி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த் குமார் 1984 ஆம் ஆண்டின் அசாம், மேகாலயா ஐ.பி.எஸ் கேடராவார். காஷ்மீர் விவகாரத்தை கையாளும் சிறப்பு அதிகாரியாக உள்ள அரவிந்த்குமார், நக்சலைட்டுகள் விவகாரத்தை திறம்பட கையாண்டவர் என கூறப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind