ரெப்போ வட்டி வீதம் தொடர்ந்து 4-வது முறையாக குறைப்பு..!

share on:
Classic

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி வீதத்தை தொடர்ந்து நான்காவது முறையாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி வீதத்தை 0.35 சதவீதம் குறைத்து, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் ரெப்போ வட்டி வீதம் 5 புள்ளி 40 சதவீதமாக குறைந்துள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி வீதம் இந்த அளவுக்கு குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவால் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். மேலும், ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் வங்கிக் கடன்களுக்கான வட்டி வீதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan