ரெப்போ விகிதம் குறைப்பு : வங்கிக்கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு

share on:
Classic

ரெப்போ விகிதத்தை 0.25 அடிப்படை புள்ளிகள் இந்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரெப்போ விகிதம் மூலம் தான் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு நிதிகளை ஒதுக்கும். இதன் அடிப்படையில் தான் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் 6.50-ஆக இருந்த ரெப்போ விகிதத்திலிருந்து தற்போது 0.25 அடிப்படை புள்ளிகளை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. இதனால் ரெப்போ விகிதம் இப்போது 6.25-ஆக உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ஷக்திகாந்த தாஸ் கடந்த டிசம்பரில் பதவியேற்ற பின்னர் அவரின் முதல் நிதி சார்ந்த நடவடிக்கையாக இது கருதப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

Ramya