சந்தையை கலக்க வரும் 'டிஜிட்டல் ரூபாய்'

share on:
Classic

இந்தியாவில் கிரிப்டோகரன்ஸியை வாங்கியவர்களுக்கும், விற்பனை செய்தவர்களுக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

கிரிப்டோகரன்ஸியை வாங்கியவர்களுக்கும், விற்பனை செய்தவர்களுக்கும் புதிய மசோதாவின் படி, பிணைபெற முடியாத தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரிப்டோகரன்ஸியை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கையாண்டால் அவர்கள் அனைவருக்கும் இந்த தண்டனை பொருந்தும். கிரிப்டோகரன்ஸியை இந்தியாவில் தவறான முறையில் கையாள்வதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோகரன்ஸியை கையாள முயல்பவர்களுக்கு இந்த நடவடிக்கை பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கிரிப்டோகரன்ஸியை வைத்து வர்த்தகம் செய்யும் பல நிறுவனங்கள், அவர்களுக்கு ஆதரவாக அரசாங்கம் செயல்படும் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில் இந்த மசோதா பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கிரிப்டோகரன்ஸியை கையாளும் நிறுவனங்களுக்கு கடுமையான தண்டனைகளை முன்வைத்துள்ள இந்திய அரசு அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய வங்கியுடன் ஆலோசனை நடத்திய பிறகு 'டிஜிட்டல் ரூபாய்' அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

News Counter: 
100
Loading...

sajeev