சிஇஓ ஓய்வுக்கான வயது வரம்பு உயர வாய்ப்பு : ஆர்.பி.ஐ. யோசனை?

share on:
Classic

வங்கிகளின் தலைமை செயலதிகாரியாக பதவி வகிப்போரின் வயது உச்ச வரம்பானது 70-ஐ தாண்டக் கூடாது என்ற விதியில் திருத்தம் கொண்டு வரும் நேரம் நெருங்கி விட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

இந்திய நிறுவனச் சட்டத்தின்படி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்படுவதன் மூலம் 70 வயதைக் கடந்த ஒருவரை தலைமை செயலதிகாரியாக பதவியில் தொடர வைக்க முடியும். நிறுவனச் சட்டத்தின் இந்த விதியில் திருத்தம் செய்ய ரிசர்வ் வங்கி ஆயத்தமாகலாம் என தெரிகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு, வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயலதிகாரியின் வயது உச்ச வரம்பை 65-லிருந்து 70-ஆக உயர்த்தியது இந்திய ரிசர்வ் வங்கி. நிறுவனச் சட்டம் 2013-ஐ அடிப்படையாக வைத்து இந்த மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இச்சட்டத்தின்படி, பங்குதாரர்கள் விருப்பத்தின் அடிப்படையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி 70 வயதிற்கு மேற்பட்டவர்களை இயக்குனராக தொடர வைக்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் ரிசர்வ் வங்கி மாறுதல் மேற்கொள்ள முயன்றால் சட்ட சிக்கல் ஏற்படும் வாய்ப்பு அதிரிக்கும் என கூறப்படுகிறது. 

இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்டவற்றின் தலைமை செயலதிகாரிகள் அடுத்தாண்டு மார்ச் மற்றும் அக்டோபரில் 70 வயதை பூர்த்தி செய்கின்றனர். இதனால், ரிசர்வ் வங்கியின் புதிய வயதுக் கொள்கையால் அவர்களது பதவிக்காலம் நிறைவுக்கு வந்து விடும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, வயது வரம்பில் உயர்வுக்கான மாற்றம் கொண்டு வரும் பட்சத்தில் ஓய்வு பெறுவது தள்ளிப்போய் விடும். 

அமெரிக்காவை பொறுத்தவரை, தலைமை செயலதிகாரியின் வயது உச்ச வரம்பு 72-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்&பி 500-யில் அங்கம் வகிக்கும் நிறுவனங்களில்  கிட்டத்தட்ட 70% நிறுவனங்களின் தலைமை செயலதிகாரிகள் 65 வயது அல்லது அதற்குள் ஓய்வு பெற்று விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

News Counter: 
100
Loading...

mayakumar