கடலே எமனானது கண்ணீரே கடலானது..! மறக்கமுடியாத துயரம்

share on:
Classic

கிருஸ்துமஸ் கொண்டாடிய மகிழ்ச்சியில் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் காலை கண்விழித்தவர்கள் பலருக்கும் அன்றைய நாள் அவ்வளவு கொடியதாக அமையும் என்று சற்றும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.

அன்று விடுமுறை நாள் என்பதால் கடற்கரையில் குடும்பம் குடும்பமாய் குதூகலமாக விளையாடிக்கொண்டிருந்த பலரும் ஆழிப்பேரலையின் அசுர வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் உயிரைவிட்டனர். கொத்துக்கொத்தாக இறந்தவர்களின் உடல்களை வண்டிகளில் அள்ளிச்சென்று ஒன்றாக புதைத்த காட்சிகளை இன்றும் நாம் மறந்திருக்க மாட்டோம். சுனாமி தாக்கி 14 ஆண்டுகள் கடந்தோடினாலும், அது விட்டுச்சென்ற சோகச் சுவடுகள் இன்றும் ஓயாமல் கண்முன்னே வந்துசெல்கின்றன. 

 

பல லட்சம் பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் 9.1 என்ற அசுர அளவுகோளில் பூகம்பம் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட ஆழிப்பேரலை இலங்கை, இந்தியா, மியான்மர், மலேசியா  உள்ளிட்ட 14 நாடுகளை புரட்டிப்போட்டது.

இந்த இயற்கை பேரிடரால் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உயிர்சேதம் மட்டுமல்லாமல் பல ஊர்களை தடம் தெரியாத அளவு சுனாமி சிதைத்தும் விட்டது.

தமிழகத்தில் மட்டும் 7000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். வேளாங்கன்னி, நாகை, காசிமேடு, புதுச்சேரி உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின. மீனவர்கள் பலரும் தங்கள் உறவினர்களையும், உடைமைகளையும் இழந்து செய்வதறியாது தவித்தனர். சுனாமியால் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றுலும் இழந்தனர். 

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
நினைத்துப்பார்த்தாலே நிலைகுலைய வைக்கும் இந்த சுனாமியின் நினைவுநாளில் உயிரிழந்தவர்களுக்கு அவர்களின் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். அழகாய் காலையில் உதித்த சூரியன்  மாலை மறைவதற்குள் பலரும் உயிரிழந்தனர்.

அவ்வளவு எளிதள்ள இந்த நினைவுதினம். பல ரனங்களோடு இறந்தவர்களுக்கு காவேரி நியூஸ் சார்பாக இதய அஞ்சலி.சுனாமியின் போது மீட்கப்பட்ட பல குழந்தைகள் இன்றும் தங்கள் பெற்றோர் குறித்த தகவல்கள் கிடைக்காமல் அரசு காப்பகங்களில் தங்கியுள்ளனர். பேரழிவை ஏற்படுத்திய இந்த பேரலை பலரது தூக்கத்தை துக்கத்தால் மட்டுமே கடக்க வழிவகுத்துவிட்டது என்றால் அது மிகையல்ல. 

மீண்டும் வேண்டாம் ஒரு சுனாமி..!
மீண்டும் ஒரு சுனாமியை மட்டும் தங்கள் வாழ்நாளில் சந்தித்துவிடக் கூடாது என்பதே பலரது எண்ணமாக உள்ளது. இயற்கை பேரிடரை மனிதனால் கணிக்க வேண்டுமானால் முடியுமே தவிர, அதனை தவிர்க்க நிச்சயம் முடியாது. 

News Counter: 
100
Loading...

youtube