ரத்தக்காயத்தையும் பொருட்படுத்தாமல் கடைசி வரை போராடிய ரியல் ஹீரோ வாட்சன்..!!

share on:
Classic

காலில் அடிப்பட்டு ரத்தம் வழிந்ததையும் பொருட்படுத்தாமல் வெற்றிக்காக கடைசி வரை போராடிய வாட்சனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இறுதுப்போட்டி :

ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களின் முடிவில் 149 ரன்கள் எடுத்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி கோப்பை என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாம் அடுத்தடுத்து அவுட்டாக, பொறுமையாக விளையாடி வெற்றிக்கு அழைத்து சென்றார் வாட்சன். கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற போது வாட்சன் ரன் அவுட் ஆனதால் போட்டியின் போக்கு மாறியது. ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது மும்பை அணி.

 

ரியல் ஹீரோ : 

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் என்ற 2 பலம்வாயந்த அணிகள் இந்த ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின. 2 அணிகளுமே தலா 3 முறை கோப்பைகளை வென்ற நிலையில், அந்த சாதனையை முறியடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமான நிலையில், இறுதி ஆட்டத்தில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷேன் வாட்சன் தற்போது டிரண்டெங்கில் உள்ளார். சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமல்லாமல் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் வாட்சனை கொண்டாடி வருகின்றனர். காரணம் என்ன தெரியுமா, காலில் அடிபட்டதை கூட பொருட்படுத்தாமல் ரியல் ஹீரோவாக இறுதிவரை வெற்றிக்கு போராடியது தான்.

கொண்டாடும் ரசிகர்கள் :

இறுதிப்போட்டியில் காலில் ஏற்பட்டதை யாரும் தெரிவிக்காமல், காலில் ரத்தம் வடிய தொடர்ந்து பேட்டிங் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் வாட்சன். அந்த புகைப்படத்தை நேற்று வெளியிட்ட ஹர்பஜன் சிங், போட்டி முடிந்த பிறகு வாட்சனின் காலில் 6 தையல்கள் போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனை ஹர்பஜன் சொல்லவில்லை என்றால், நமக்கெல்லாம் வாட்சனின் இந்த அர்ப்பணிப்பு தெரியாமலேயே இருந்திருக்கும். இந்த செய்தி வெளியான உடனே சமூக வலைதளங்களில் அவரை பலரும் கொண்டாடி வருகின்றனர். சென்னை அணி வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்துள்ள வாட்சனுக்கு ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். #ShaneWatson #ChennaiSuperKings #CSK போன்ற ஹாஷ்டாகுகள் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகின்றன. 

 

 

 

 

News Counter: 
100
Loading...

Ramya