போட்டியில் சரியாக விளையாடாததே தோல்விக்கு காரணம் - விராட் கோலி..!!

share on:
Classic

ஒவ்வொரு போட்டியிலும் தோல்வியடைந்துவிட்டு அதற்காக நொண்டி சாக்கு சொல்ல முடியாது என பெங்களூர் அணித்தலைவர்  விராட் கோலி தெரிவித்துள்ளார்.

2019 ஐ.பி.எல் போட்டியில் பெங்களூர் அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. நேற்று நடந்த டெல்லி அணிக்கு எதிரான போட்டியிலும் பெங்களூர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் மிகுந்த வேதனையடைந்த விராட் கோலி 160 ரன்கள் குவித்தால் கடும் போட்டியை கொடுக்க முடியும் என நினைத்தோம்.

சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்ததால் 150 ரன்கள் தான் இலக்காக நிர்ணயிக்க முடிந்தது. 2வது இன்னிங்சில் பந்திவீசுக்கு ஏற்ற வகையில் ஆட்டம் அமையவில்லை. இந்த ஆட்டத்தில் நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு போட்டியிலும் தோல்வி அடைந்துவிட்டு அதற்கான காரணம் தேடுவதும் அதனை பேசுவதும் முறையானது அல்ல. நாங்கள் சரியாக விளையாடாததே தோல்விக்கு காரணம் என் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan