முகப்பரு ஏன் வருகிறது?... 3 முக்கிய காரணங்கள் உங்களுக்காக

share on:
Classic

இளம் பெண்களிடம் "உங்க பெரிய பிரச்சனை எது?" என்று கேட்டு பாருங்களேன்.... 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் 'முகப்பரு' என்று தான் சொல்வார்கள். இப்படி பலரின் சாபத்திற்கு ஆளான இந்த முகப்பருக்கள் வருவதற்கான காரணமா என்ன என்பது தலையை பிய்த்துக்கொள்ளும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதோ முக்கியமான மூன்று காரணங்கள்:

குழந்தை பருவத்தில் இளைமையாகவும் தெளிவாகவும் இருந்த முகம், பருவம் அடையும் காலத்தில் ஏற்படும் சில பல மாற்றங்களால் முகம் முழுவதும் பருக்களால் நிறைந்து கலை இழந்து காணப்படுகிறது. இந்த பிரச்சனை பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் சேர்த்து தான். அந்த பருக்கள் மறைந்தாலும் அது ஏற்படுத்தும் தழும்புகள் நீங்காமல் அப்படியே தங்கி விடுகிறது. இதனால் இளைஞர்கள் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். 

எண்ணெய் சுரப்பிகள் :

முகத்தில் இருக்கும் எண்ணெய் சுரப்பிகள் அதிக அளவில் சுரப்பது தான் இந்த மாதிரி முக பருக்களுக்கு முக்கியமான காரணம். இந்த சுரப்பிகளின் வாய் அடைபட்டு இருக்கும் நிலையில் தான் கரும்புள்ளிகள் தோன்றுகிறது. மேலும் இதில் தோன்றும் பிசுபிசுப்பான திரவம் அழுக்கு, தூசி, பாக்டீரியா போன்றவற்றை ஈர்ப்பதாக கூறப்படுகிறது. அடிக்கடி குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது தான் இதற்கு சிறந்த தீர்வு.

 

பாக்டீரியா :

முகத்தில் பாக்டீரியா தொற்று ஏற்படும் போது எரிச்சல் ஏற்படுகிறது. நாளடைவில் இது சீழ் உருவாக காரணமாகிறது. இப்படி தான் மிக பெரிய சிவந்த பருக்கள் வருகிறது. பருக்கள் இருக்கும் பகுதியை அடிக்கடி சுத்தம் செய்வதும், வெப்பம் உருவாகும்படி அந்த இடங்களில் சுத்தமான துணியை வைத்து அழுத்தம் கொடுப்பதும் கூட இதற்கு பலன் தரும்.

 

ஷேவிங் :

இது உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கலாம். ஆம் ஷேவிங் செய்வதால் முகத்தில் வெடிப்புகளும் வெட்டு காயங்களும் ஏற்பட்டு. அதன் மூலம் பல தேவையில்லாத திரவங்கள் சருமத்திற்குள் நுழைய வழிவகுக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நீங்கள் பயன்படுத்தும் ஷேவிங் கிரீம், ஜெல் மற்றும் சுகாதாரமில்லாத ரேசர் தான். எனவே இவற்றை தவிர்ப்பது உங்கள் சருமத்திற்கு நன்மை அளிக்கும்.

 

News Counter: 
100
Loading...

youtube