ஷங்கர் படத்திற்கு இளையாராஜா இசையமைக்காததற்கு இது தான் காரணமா?..

share on:
Classic

இளையராஜாவின் மீதுள்ள மரியாதை மற்றும் பயம் காரணமாகவே அவரை தனது படத்திற்கு இசையமைக்க தேர்ந்தெடுக்கவில்லை என்று இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் 75-வது வயதை முன்னிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ‘இளையராஜா 75’என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. ஏ.ஆர். ரஹ்மான், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட இயக்குனர் ஷங்கரிடம் ஏன் இளையராஜாவுடன் சேர்ந்து நீங்கள் பணியாற்றவில்லை என்று கேள்வி எழுப்பப்பட்டது.

ஆரம்ப காலத்தில் தனது 'ஜெண்டில் மேன்' படத்திற்கு இளையராஜா இசையமைக்க வேண்டும் என்று அவரிடம் அப்பாயின்ட்மெண்ட் வாங்கியதாகவும், ஆனால் அவரிடம் இருந்து எப்படி இசையை பெறுவது என்பதில் தனக்கு சந்தேகம் இருந்ததாகவும் ஷங்கர் தெரிவித்தார். மேலும் இளையராஜா மீது உள்ள மரியாதை கலந்த பயமே அவருடன் இணைந்து பணியாற்ற முடியாததற்கு காரணம் எனவும் கூறிய ஷங்கர், கமல்ஹாசன் நடித்திருந்த விழிப்புணர்வு விளம்பரப்படத்திற்கு ராஜா சாருடன் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததாகவும் அதில் தான் கேட்டுக்கொண்ட படி அவர் இசையமைத்ததாகவும் தெரிவித்தார். அவரின் இசை தனது வாழ்க்கை முழுவதும் பணிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. ஆரம்ப காலம் முதலே ஷங்கரின் ெும்பாலான படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் மட்டுமே இசையமைத்து வந்த நிலையில் தற்போது இந்தியன் 2 படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

News Counter: 
100
Loading...

Ramya