சாதனை படைத்த ’கேசரி' படத்தின் டிரைலர்..!!

share on:
Classic

இந்தியன் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் அக்‌ஷய் குமார்.

பல வெற்றி படங்களில் நடித்து வரும் இவர் வித்யாசமான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  அப்படி அக்‌ஷய் குமாரின் நடிப்பில் இப்போது ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் படம் தான் கேசரி. 1897 ம் ஆண்டு ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை எதிர்த்து 21 சீக்கியர்கள்  போரிட்ட சஹார்க்கி போரை மையபடுத்தி எடுக்க பட்ட இந்த படத்தில் ஹவில்தார் இசார் சிங் கேரக்டரில் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக பிரணிதி சோப்ரா நடித்துள்ளார். 

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கேசரி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இப்போது அந்த டிரைலரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 360 மில்லியன் நெருங்கிட்டு வருகிறது.  இதுமட்டுமில்லாமல் கேசரி படத்தின் இந்த டிரைலர் 1 மில்லியன் லைக்ஸ்சையும் பெற்று சாதனை படைத்துள்ளது.

அணுராக் சிங் இயக்கத்தில், தர்மா புரொடக்ஷன் சார்பில் கரண் ஜோகர் தயாரிச்சுருக்க இந்த கேசரி படத்திற்கு தனிஷ் பாகஷ்சி இசையமைத்துள்ளார்.  பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் கேசரி படம் வரும் மார்ச் 21ம் தேதி வெளியாகிறது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan