கேரளாவில் கனமழை..பல மாவட்டங்களுக்கு ‘ரெட் அலெர்ட்’

share on:
Classic

கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமாக பெய்ய தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளதால் 4 அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக ஆற்றில் நீரின் அளவு உயரலாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலும் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 

தமிழகத்தை சேர்ந்த இரண்டு மீனவர்கள் உள்பட 4 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். 3 பேர் மாயமாகியுள்ளனர். கடல்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என மாநில அரசு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.

News Counter: 
100
Loading...

aravind