உச்சகட்ட பனிப்பொழிவால் ஐரோப்பிய நாடுகளுக்கு ரெட் அலர்ட்

share on:
Classic

பனிப்புயல் மற்றும் உறைபனி காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

உச்சகட்ட பனிப்பொழிவால் ஜெர்மன் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை குளிர் மற்றும் பனிச்சரிவு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே அடுத்த சில நாட்களில் பனி விழும் அளவு 6 அடி வரை அதிகரிக்கக்கூடும் என ஜெர்மனி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் தேங்கியுள்ள பனியை அகற்ற ராணுவத்தினரைப் பயன்படுத்த ஜெர்மன் அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind