கர்நாடகாவில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

share on:
Classic

கர்நாடகாவில் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், உடுப்பி, கொடகு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக உடுப்பி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையையடுத்து கர்நாடகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan