அறிமுகமே 70 inch-ல் அசத்தும் Redmi..!

share on:
Classic

ரெட்மி நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட் டிவியை ஆகஸ்ட் 29-ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது.

சியோமியின் துணை பிராண்டான ரெட்மிக்கு ஆகஸ்ட் 29-ஆம் தேதி மிகப்பெரிய நாளாக அமையவுள்ளது. திட்டமிட்டபடி ரெட்மி தனது முதல் ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்துகிறது. இதன் வெளியீட்டு நிகழ்வு சீனாவில் நடைபெற உள்ளது. வெளியாகவிருக்கும் இந்த ஸ்மார்ட் டி.வி குறித்த சில விவரங்களை ரெட்மி ஏற்கனவே வெளியிட்டது. அதன்படி, இந்த டி.வி.யில் 70 அங்குல திரை இருக்கும் என்று அந்நிறுவனம் உறுதி செய்தது. வெளியீட்டு தேதியை அறிவித்தவுடன், முதல் முறையாக Redmi Smart TV-யின் அதிகாரப்பூர்வ புகைப்படத்தை அந்நிறுவனம் சமூகவளைதளத்தில் பகிர்ந்துள்ளது. வெளியான அந்த புகைப்படத்தில், ரெட்மி டிவி ஒரு மெல்லிய மற்றும் பெரிய திரையுடன் பிரமிக்க வைக்கிறது. டிவியின் நான்கு பக்கங்களிலும் குறைந்தபட்ச பெசல்களுடன் காட்சியளிக்கிறது.

ஆனால், இந்த டிவியின் விலை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை ரெட்மி. இந்நிலையில், இந்த ஸ்மார்ட் டிவியின் விலை மலிவாக இருக்கும் என்று வதந்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே, சந்தையில் விற்பணையாகும் Mi தொலைக்காட்சிகளைக் காட்டிலும் Redmi Smart TV-யின் விலை குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. ரெட்மி டிவியைப் பொறுத்தவரை, அந்நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களுக்கு விதிக்கப்படும்  விலை உத்திகளையே பின்பற்றும் என்பது தெளிவாகத் தெரிகிறது. குறைந்த விலையில் தேவையான சிறப்பம்சங்களுடன் தொலைபேசிகளை தயாரித்து விற்பணை செய்வதில் ரெட்மி பெயர்போன நிறுவனமாக கருதப்படுகிறது.  அதேபோல, வரவிருக்கும் ரெட்மி டிவி வரிசையிலும் இதே யுக்தியை பின்பற்றும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.

ரெட்மியின் இந்த 70 அங்குல ஸ்மார்ட் டிவி 4K Ultra HD டிஸ்பிளேவுடன், பயனர்களுக்கு சிறந்த மற்றும் மேம்பட்ட காட்சி அனுபவத்தை வழங்கும் என கூறப்படுகிறது. ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்வில், முதற்கட்டமாக 70 inch டிவியை அறிமுகம் செய்கிறது. அதன்பிறகு, சில மாதங்களில் 40 inch டிவி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 40 inch மற்றும் 70 inch டிவிகளுக்கு இடையில் சிறப்பம்சங்களை பொருத்தவரை பெரும்பாலும் வித்தியாசங்கள் இருக்காது என்று கூறப்படுகிறது. 40 அங்குல டிவியின் விலை 70 அங்குல டிவியை விடவும் குறைவாக இருக்கும். இப்போதைக்கு, ரெட்மி டிவி இந்தியாவுக்கு வருமா இல்லையா என்பது குறித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. இந்தியா ஒரு முக்கியமான சந்தையாகும் என்பதாலும், MI டிவிகளுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்புகள் இருப்பதையும் கருத்தில் கொண்டு, Redmi Smart TV விரைவில் இந்தியாவுக்கு வரக்கூடும் என்று நம்பப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Saravanan