திருப்பதியில் செம்மர கட்டைகள் பறிமுதல் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புதிருப்பதியில் செம்மர கட்டைகள் பறிமுதல்

திருப்பதியில் செம்மர கட்டைகள் பறிமுதல்

February 10, 2018 183Views
திருப்பதியில் செம்மர கட்டைகள் பறிமுதல்

திருப்பதி அருகே ஒரே நாளில் பல்வேறு இடங்களில் கடத்தப்பட்ட செம்மரங்கள் பறிமுதல்  செய்யப்பட்டன. 

திருப்பதி அருகே செம்மரங்கள் கடத்தப்படுவதாக,போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். 

அப்போது,  ரெட்டிகுட்டா அருகே வனப்பகுதியில் 42 செம்மரங்களை மினிவேனில் கடத்த முயற்சித்தபோது,போலீஸ்  அதிகாரிகள் செம்மரங்களைப் பறிமுதல் செய்தனர். 

அதேப்போல், அலிபிரி சாலையில்  வனப்பகுதியில் இருந்து காரில் கடத்த முயன்ற 16 செம்மரங்களையும் போலீசார் கைப்பற்றினர். இதேபோல் மற்றொரு இடத்தில்  ஒரு காருடன் 8 செம்மரங்கள் மட்டும் பிடிபட்டது. இச்சம்பவங்களில் கடத்தல்காரர்கள் போலீசாரைக் கண்டதும் தப்பியோடி விட்டனர்.