சீர்திருத்தங்கள் மூலம் டிஜிட்டல் மயமாக்கலின் பயன்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது : சர்வதேச பண நிதியம் தகவல்

share on:
Classic

இந்தியா மேற்கொண்ட சில சீர்திருத்தங்கள் காரணமாக டிஜிட்டல் மயமாக்கலின் பயன்களை அடைந்து வருகிறது என்று சர்வதேச பண நிதியம் தெரிவித்துள்ளது.

வருடாந்திர கூட்டத்திற்காக உலக வங்கி மற்றும் சர்வதேச பண நிதியம் ஆகியவை நிதி கண்காணிப்பு அறிக்கையை வெளியிட்டனர். அதில் சில சீர்திருத்தங்களை மெற்கொண்டதன் காரணமாக டிஜிட்டல் மயமாக்கலின் பயன்கள் வெளிப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மெலும் இந்தியா மற்றும் இந்தோனேஷியாவில் மின்னணு கொள்முதல் அறிமுகமானதால் போட்டி அதிகரித்துள்ளதோடு, கட்டுமானத்தின் தரமும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மோசடிகள் குறைந்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் நிதி கண்காணிப்புக்குழுவின் அறிக்கையின் படி பொதுக் கொள்முதலின் நடைமுறைகள் பொருட்களின் விலையிலும், தரத்திலும் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. பாராளுமன்றம் மற்றும் சிவில் சமுதாய அமைப்புக்கள் ஆகியவை பொது நிதிகளை பாதுகாப்பதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை பொறுப்புணர்வுடன் வைத்திருக்க உதவுகிறது என்றும் ஆய்வுகள் தெரிவிப்பதாக சர்வதேச பண நிதியம் கூறியுள்ளது. 

News Counter: 
100
Loading...

Ramya