'நட்பே துணை' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

share on:
Classic

டி.பார்த்திபன் இயக்கத்தில் ஹாக்கி விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள காமெடி திரைப்படம் தான் நட்பே துணை. ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாக நடிக்க அனகா இவருக்கு ஹீரோயினா நடித்துள்ளார்.

நட்பே துணை படத்தில் ஆதிக்கு இணையான மிரட்டலான வேடத்தில் இயக்குனர்கள் கரு பழனியப்பன் மற்றும் பாண்டியராஜன் நடிச்சிருக்கிறது மட்டுமில்லாமல் இவர்களைத் தவிர ஹரிஷ் உத்தமன், ஆர் ஜே விக்னேஷ் காந்த், எருமை சாணி விஜய், அஜய் கோஸ், சுட்டி அரவிந்த், புட் சட்னி ராஜ்மோகன், பிஜி ரமேஷ் என  பலர் நடித்துள்ளனர்.

சுந்தர் சி ஓட  அவினி மூவிஸ் இந்த நட்பே துணை படத்தை தயாரிக்க படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்று நட்பே துணை படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருதுகிறது.  

ரசிகர்களின்  பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் நட்பே துணை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ஹிப் ஹாப் ஆதியின் 2-வது படமான இந்த நட்பே துணை படம் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan