’கே -13’ படத்தின் சென்சார் பற்றிய தகவல் வெளியீடு..!!

share on:
Classic

நீலகண்டன் இயக்கத்தில் அருள்நீதி நடிப்பில் உருவான கே 13 படத்தின் சென்சார் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வம்சம் படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் அருள்நிதி.  அதன்பிறகு இவர் நடித்த மௌனகுரு படம் அருள்நிதிக்கு  நல்ல நடிகர் என்ற அந்தஸ்த்தை  கொடுத்தது.  வித்யாசமான கதைகளை கொண்ட படங்களில் தேர்தெடுத்து நடிக்கும் இவர் பிருந்தாவனம் படத்தில் வாய் பேச இயலாதவராக நடித்து. தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை மறுபடியும் நிரூபித்துள்ளார்.

இப்போது அருள்நிதி பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியா ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருக்கிறார். சாம் சி எஸ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த நிலையில் இப்போது கே-13 படத்தின் சென்சார் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.  இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கே-13 படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர்.  மேலும் கூடிய விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan