அசத்தும் ரிலையன்ஸ்... அம்பானியின் லாபம் 'வேற லெவல்' உயர்வு

share on:
Classic

ரிலையன்ஸ் குழுமத்தின் லாபம் 9% அளவிற்கு ஏற்றம் கண்டுள்ளது. 

நடப்பு நிதியாண்டிற்கான 3-வது காலாண்டு முடிவுகளை பிரபல ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ளது. அதில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,251 கோடி என்றும், இதன் ஆண்டுக்காண்டு வளர்ச்சி விகிதமானது 8.82%-ஆக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகர லாபமானது முந்தைய காலாண்டில் ரூ. 9,420 கோடி ரூபாயாக இருந்ததாகவும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 56.38% உயர்ந்து ரூ. 1,60,299 கோடியாக உச்சம் பெற்றிருப்பதாகவும் ரிலையன்ஸ் குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்தாண்டு மார்ச் மாதம் முடிவில் ரூ. 2,18,763 கோடியாக இருந்த கொடுபட வேண்டிய கடன் தொகையானது கடந்த டிசம்பரில் ரூ. 2,74,381 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் ரிலையன்ஸ் குழுமத்தின் காலாண்டு முடிவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த அசுர வளர்ச்சி குறித்து பேசிய ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி, இன்றைய தலைமுறை நுகர்வோர்களுக்கு ஏற்றார்போல் தங்களது பொருட்களின் விற்பனை நடந்து வருவதாகவும், சில்லரை மற்றும் ஜியோ தளங்களில் செயல்பட்டு வரும் வர்த்தகங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், நாளுக்கு நாள் நிறுவனம் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அம்பானி பெருமிதத்துடன் கூறியுள்ளார். 

News Counter: 
100
Loading...

mayakumar